குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்!
Reha
2 years ago

நெல்லியடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பாடசாலை மைதானத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றுக்கூடிய போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



