கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகளிலும் பரவிய குரங்கு அம்மை நோய்
#MonkeyPox
Prasu
3 years ago

கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் குரங்கு அம்மை நோய் பரவியது. அதன்படி உலக நாடுகளில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது பிரேசிலிலும் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்று வந்த 41 வயதுடைய ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வேறொரு நபருக்கும் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\



