முதலாம் நாள் ஆட்ட நிறைவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 230 ஓட்டங்கள்

இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்குமிடையிலான 11ஆவது கிரிக்கட் போட்டி இன்று காலை ஆரம்பமானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி 59.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சாம்சன் 80பந்துகளில் 77 ஓட்டங்களையும், பிரியந்தன் 58 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி சார்பில் சாகித்திரன் 5 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி 28 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி சார்பில் டிலக்சன் 34 ஓட்டங்களையும் சஜித்தரன் 18 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் பரத்வாசன் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
நாளைய தினம் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது.



