குரங்கு அம்மை நோய் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் அறிக்கை
Mayoorikka
2 years ago

குரங்கு அம்மை நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு இந்நோய் இன்னும் பரவாததால் இலங்கையில் தற்போது இந்த நோய் அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



