கருப்பு பட்டியுடன் மகிந்த
Kanimoli
2 years ago

வன்முறையாளர்கள் சிலரால் நிட்டம்புவையில் கொலை செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அந்த கட்சியை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கறுப்பு பட்டியை அணிந்து நாடாளுமன்ற அமர்வுக்கு சென்றுள்ளனர்.
அதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கருப்பு பட்டியை அணிந்து அவையில் அமர்ந்திருப்பதை காணக் கூடியதாக இருந்தது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீத பண்டார தென்னகோன், மகிந்த ராஜபக்சவின் கையில் கருப்பு பட்டியை கட்டி விட்டுள்ளார்.
அமரகீர்த்தி அத்துகோரள கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவையில் நடந்த வன்முறை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



