புதிய அமைச்சுக்களுக்கு பவித்திரா- தம்மிக்க பெரேரா நியமனம்? வர்த்தமானி வெளியீடு
Mayoorikka
2 years ago

இரண்டு புதிய அமைச்சு பதவிகளும், அவற்றுக்கான விடயப்பரப்புகளும் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அமைச்சுகளுக்கு புதிதாக இரு அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் தம்மிக்க பெரேரா, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சராக நியமிக்கபடவுள்ளார் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



