இலங்கையில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையால் விஷ விதைகளை உண்ட தாய் மருத்துவமனையில் அனுமதி!

Nila
2 years ago
இலங்கையில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையால்  விஷ விதைகளை உண்ட தாய் மருத்துவமனையில் அனுமதி!

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவு எதுவும் வழங்க முடியாமல், மூன்று நாட்களாக தனது பிள்ளைகள் கடும் பசியால் நீரை மட்டும் அருந்தியுள்ளனர்.

அதனை பார்க்க முடியாமல் தாய் உயிரை பறிக்கும் ஆபத்தான விதைகளை உட்கொண்டுள்ளார்.

தற்போது ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் உள்ள போதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என அவசரகால பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த குடும்பத்தின் பசியை போக்குவதற்கு உணவிற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெல்லவாய கிராமப் பகுதியில் வசிக்கும் 44 வயதான தந்தை மற்றும் தாய்க்கு ஒன்பது, எட்டு மற்றும் நான்கு வயதுடைய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

நிரந்தர வருமானம் இல்லாததால் சமீப நாட்களாக சாப்பிட எதுவும் கிடைக்காமல் இந்த குடும்பத்தினர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இக்குடும்பத்திற்கு யாராவது உதவ விரும்பினால் தந்தையின் தொலைபேசி இலக்கமான 076-1040036 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!