இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!
Prabha Praneetha
3 years ago
இலங்கையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் உள் இடங்களிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் முகக்கவசங்களை அணியுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு தனிப்பட்ட நபரும் தங்கள் விருப்பப்படி முகக்கவசங்களை அணிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பி.சி.ஆர். மற்றும் என்டின் பரிசோதனைகளும் இன்று முதல் மேற்கொள்ளவேண்டிய தேவையில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.