புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Prabha Praneetha
2 years ago
புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு என்பன உருவாக்கப்பட்டுள்ளன.

குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன குறித்து அந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!