கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பொது மக்களுக்கு எச்சரிக்கை

Nila
2 years ago
கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பொது மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
 
இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன. இதில் 54% அல்லது அதிகமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். 
 
அதன்படி கடந்த 8 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 728 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 354 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் இந்த மாதம் 233 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
அதன்படி, இவ்வருடம் இதுவரையில் 26,622 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!