இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு!
Nila
2 years ago

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு ஆயிரத்து 812 மில்லியன்களாக காணப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்து 920 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறத்த கையிருப்பானது எமது நாட்டின் தேவைக்கு போதுமானதாக அமையாது எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.



