இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு துறைசார் வல்லுனர்களும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பல தடவை எச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் தற்போது நாடு மிகவும் அபாய கட்டத்திற்குள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உச்சத்தை தொட்டு வருகின்றன.
குறிப்பாக அரிசி ஒரு கிலோ இன்று 250-350 வரை விற்பனையாகி வரும் நிலையில் எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை 500 ரூபாவை எட்டும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டில் கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துச்செல்லும் விலையேற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான செலவுகள், எண்ணெய் மற்றும் இறக்குமதிப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரித்துச்செல்லுமென அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் June மற்றும் September காலப்பகுதிக்குள் நாட்டில் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடையானது, சாதாரண எதிர்பார்ப்பை விடவும் குறைந்துள்ளது. 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதிகளுக்குள் இரசாயன பசளை மற்றும் களை நாசினிகளுக்கு தடை விதிக்கப்பட்டமையே இதற்கான பிரதான காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



