அலுவலகத்தில் மர்மநபரால் சுட்டு கொல்லப்பட்ட மந்திரி
#Death
Prasu
3 years ago
கரீபியன் தீவுநாடுகளில் டொமினிக் குடியரசும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள்துறை மந்திரியாக ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஒர்லண்டோ நேற்றுகாலை அவர் தன் அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டு இருந்தார்.
அப்போது அலுவலகத்திற்கு வந்த நபர் தான் வைத்து இருந்த துப்பாக்கியை கொண்டு ஒர்லண்டோவை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மந்திரி ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் எம்.பி.யை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.



