தற்கொலை தாக்குதல் நடத்துவேன்-பாகிஸ்தான் அரசை மிரட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா

#Pakistan #PrimeMinister #ImranKhan
Prasu
3 years ago
தற்கொலை தாக்குதல் நடத்துவேன்-பாகிஸ்தான் அரசை மிரட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இம்ரான் கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா இப்போதைய பிரதமர் ஷெபாஸ் அரசுக்கு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விசுவாசமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- 

"இம்ரான் கானின் தலையில் ஒரு முடி பாதிக்கப்பட்டால் கூட, நீங்களும் உங்கள் குழந்தைகளும் இருக்க மாட்டீர்கள் என நாட்டை வழிநடத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். முதலில் நான்தான் உங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன், உங்களை விடமாட்டேன். அதே போல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்த தயாராக உள்ளனர்" என்பதை வீடியோவாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். 

இதுகுறித்து இஸ்லாமாபாத் போலீசார் கூறுகையில், பாகிஸ்தானின் தலைநகா் இஸ்லாமாத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், பானி காலா பகுதிக்கு வருவார் என கூறப்படுவதை அடுத்து அந்த பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர். முன்னதாக, இம்ரான் கானுக்கு எதுவும் நடந்தால், அதற்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுக்கப்படும்.

அவா் மீது நடத்தப்படும் தாக்குதல் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். எனவே அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அவரின் உறவினரும், கட்சியை சோ்ந்தவருமான ஹசன் நியாசி என்பவா் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!