பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1.jpg)
தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் நாளை நடைபெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சேவை தேவைகளை காரணம் காட்டி பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மூன்று பொலிஸ் அதிகாரிகளை அண்மையில் இடமாற்றம் செய்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான அஜித் ரோஹன, ராஜித ஸ்ரீ தமிந்த மற்றும் கமல் சில்வா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அரசியல் அழுத்தங்கள் காரணமாக நியமிக்கப்பட்ட 182 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் தொடர்பிலும் நாளைய பொதுச்சேவை ஆணைக்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.



