மின் கட்டண அதிகரிப்பு யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது!
Mayoorikka
2 years ago

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(06) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் வரம்பற்ற இழப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் எம்.எம்.சி. பெர்னாண்டோ கூறியுள்ளார்.
தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் சுமார் 276 பில்லியன் ரூபாயாக காணப்படுவதுடன், மொத்த செலவினம் 750 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



