ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சி?
Nila
2 years ago

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பலத்த கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தயவுசெய்து இதை திரும்பப் பெறுங்கள் ஐயா” என திடீர் அவசர கோஷத்துடன் பசில் ராஜபக்ஷவை அரசாங்கத்தை கவிழ்க்க வலியுறுத்தி வருவதாகவும், பசில் ராஜபக்ச பின்தங்கிய நிலையில் இதுவரை அது நடக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசாங்கத்திற்குள் பல கடுமையான பிளவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரி – மஹிந்த 52 நாள் அரசாங்க சாதனையை தற்போதைய அரசாங்கமும் உடைக்கலாம் என கூறப்படுகின்றது.
அதற்கான சாதக நிலைமைகள் இன்னும் உருவாகி வருவதாகத் தெரிகிறது.



