அதிகாரங்களை இழக்கும் இலங்கையின் அமைச்சர்கள் கோத்தாபய எச்சரிக்கை
Kanimoli
2 years ago

அமைச்சுக்கு சொந்தமான அரச நிறுவனமொன்றின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முழுமையாக அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பாக 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இதுவரை இரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் புதிய அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் அமைச்சர்கள் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



