பண மோசடி வழக்கில் பிரதமர் மற்றும் அவரது மகனை கைது செய்ய அனுமதி கோரும் புலனாய்வு அமைப்பு

#Pakistan #PrimeMinister #Arrest
Prasu
3 years ago
பண மோசடி வழக்கில் பிரதமர் மற்றும் அவரது மகனை கைது செய்ய அனுமதி கோரும் புலனாய்வு அமைப்பு

 

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பண மோசடி வழக்கில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகனை கைது செய்ய அனுமதி வேண்டியுள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பணமோசடி செய்த வழக்கில் ஷபாஸ் ஷெரீபை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி வேண்டியுள்ளது.  இதற்கு முன் முன்னால் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின் போது ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஸ் ஆகிய இருவரும் பல அரசு திட்டங்களில் இருந்து 626 கோடி ரூபாயை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. பின்னர் இந்த வழக்கில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகனின் மீது கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் கைது நடவடிக்கையை தவிர்க்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். 

பிறகு 1400 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு சம்பந்தமாக அவர்களுக்கு எதிராக இடைக்கால விசாரணை அறிக்கையும் புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!