மேற்கத்திய நாடுகளை எச்சரித்த புடின்

#Putin
Prasu
3 years ago
மேற்கத்திய நாடுகளை எச்சரித்த புடின்

புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு தொலை தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கினால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியுள்ளது. 

இந்நிலையில், இது குறித்து பேசிய புட்டின் அந்த ரக ஏவுகணைகள் வழங்கப்பட்டால், தாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை தாக்குவோம் என கூறினார். எனினும், அந்த இலக்குகள் தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!