பயிற்சியாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பிரதேச செயலாளர்

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுக்கொண்ட பயிற்சியாளர்களை பிரதேச செயலாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று அது தொடர்பான புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதினைந்து இளைஞர், யுவதிகள் வலப்பனை பிரதேச செயலகத்தில் தொழில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் எட்டுப் பேரை அச்சுறுத்தி பிரதேச செயலாளர் தன் தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். சிலரை மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகமும் செய்துள்ளார்.
தன்னுடன் இணங்கிப் போகவில்லை என்றால் தொழிற்பயிற்சியின் முடிவில் தொழில் நிரந்தரம் பெறுவதற்கான சிபாரிசு கடிதம் வழங்கப்படாது என்று அச்சுறுத்தியே அவர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



