யாழ்.பல்கலையில் தியாகி பொன் சிவகுமாரனின் 48வது நினைவுதினம்
Kanimoli
2 years ago

தியாகி பொன் சிவகுமாரனின் 48வது நினைவுதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் கைலாசபதி கலையரங்கின் முன்பாக மாணவர்களால் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தற்கொடையாளர் பொன் சிவகுமாரனின் நினைவுப்பகிர்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலை மாணவர்களால் அகவணக்கம்
பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.



