சற்று முன்னர் 275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
மெஸ்கோவில் இருந்து காலியாக வந்த Aeroflot Airlines ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில் நீதிமன்ற ஆணையின்படி, ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் உள்ள பயணிகளை அழைத்து செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்கவுக்கு வந்த விமானத்தின் மூலம் 275 ரஷ்யர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



