லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்களின் அறிவிப்பு
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
லாப்ஸ் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பலில் இருந்து நேற்று இரவு முதல் எரிவாயுவை இறக்கி வருவதாக அதன் தலைவர் வேகபிட்டிய தெரிவித்தார்.
அதன்படி, இன்று முதல், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட ஏனைய பகுதிகளுக்கும் லாப்ஸ் எரிவாயு முறையாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், லாப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்துவதாக வெளியான வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததுடன் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்திருந்தது.



