ரஷ்ய விமான விவகாரம் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Reha
2 years ago
ரஷ்ய விமான விவகாரம் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

ரஷ்ய 'எரோஃப்ளோட்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பினால் பயணிகளுக்கும் 'எரோஃப்ளோட்' நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டு மீண்டும் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு குறித்த ரஷ்ய நிறுவனம் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வருத்தமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய 'எரோஃப்ளோட்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்யாவின் 'எரோஃப்ளோட்' விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு எதிர்வரும் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!