திருட்டில் ஈடுபட்டவர் அடித்துக் கொலை
Kanimoli
2 years ago

கொம்பனி வீதி ரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் கம்பிகளைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை பின்தொடர்ந்து வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், உயிரிழந்தவர் 45 வயதுடைய கொம்பனி வீதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.



