எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் - லிட்ரோ நிறுவனம்
Reha
2 years ago

2,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் மாதிரிகள் நாளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொது மக்களை கோரியுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான 37.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு இன்றும் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.



