நோயாளி மரணம் - வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய உறவினர்கள்
Reha
2 years ago

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையில் 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
71 வயதான நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையை அடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



