இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு தொடர்பில் சுமந்திரன் எம்.பி வெளியிட்ட தகவல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டிற்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுமந்திரனின் வீட்டிற்கு பாதுகாப்பு கடமையில் இருந்த இராணவச் சிப்பாய் ஒருவரே இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமந்திரன் எம்.பி குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள சுமந்திரன் எம்.பி இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கடந்த மே-9 ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளுக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.
குறித்த பாதுகாப்பு எனது வீட்டிற்கு தேவையில்லை என நான் மறுத்திருந்த போதிலும் வீட்டிற்று அருகே இராணுவ வீரர்களா பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
அவ்வாறு பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.



