தனது சம்பளத்தை விளையாட்டு துறைக்கு அன்பளிப்புச் செய்த அமைச்சர்
Prathees
2 years ago

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது சம்பளத்தை விளையாட்டு நிதியத்தில் வரவு வைத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து விளையாட்டுத்துறை திறைசேரிக்கு பெறப்படும் நிதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
பணப்பற்றாக்குறையால் வீரர்களுக்கு பாரபட்சமின்றி அனைத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய விளையாட்டு நிதியை பலப்படுத்த வேண்டும்.
தேவையான சத்தான உணவைப் பெறுதல், தொடர் பயிற்சி போன்ற பணிகளை புறக்கணிக்கக் கூடாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



