வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
Reha
2 years ago

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதோடு நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மண்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் மோட்டார் வண்டியை செலுத்தி வந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றுடன் மோதுண்டத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குஞ்சர்கடை சந்திக்கும் புறப்பொறுக்கிக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டர் ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



