டீசல் களஞ்சியசாலையான வீடு!
#SriLanka
#Lanka4
Shana
2 years ago

சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (02) காலை மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 1,700 லீற்றர் டீசல் STF அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், சட்டவிரோதமான முறையில் டீசல் வைத்திருந்த சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



