போராட்டத்தால் மட்டுமே வெல்ல முடியும்-இரா.சாணக்கியன்

போராடினால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக எரிவாயுவினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் இரவு பகலாக வீதியில் உறங்கும் நிலையேற்பட்டது.
இதனால் மட்டக்களப்பு பயனியர் வீதி உட்படப் பல இடங்களில் எரிவாயுவுக்காகக் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
இதனால் சம்பவ இடத்துக்குச் சென்று மாவட்ட அரசாங்க அதிபரையும் தொடர்பு கொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
பின்பு குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு எரிவாயுவினை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
போராடினால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.



