எக்னலிகொட வழக்கில் சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
Prathees
2 years ago

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேர். எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சாட்சிகள் செல்வாக்கில் இருப்பதாகத் தெரியவருவதாக பாதிக்கப்பட்ட தரப்பு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எக்னலிகொட 2010 ஜனவரி 24 ஆம் திகதி இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்துக் காணாமல் போனதாக முறையிடப்பட்டது. இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர், ஆனாலும் இதனை அரசாங்கள் மறுத்துள்ளது.



