உக்ரைனுக்கான புதிய $700 மில்லியன் ஆயுத உதவி - அமெரிக்க ஜோ பைடன்

உக்ரைனுக்கான புதிய $700 மில்லியன் ஆயுத உதவியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்தார்.
அதில் உயர் இயக்க பீரங்கி ராக்கெட் அமைப்புகளும் அடங்கும். இது 80 கி.மீ (50 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும்.
எங்கள் உக்ரேனிய பங்காளிகளுடன் அமெரிக்கா என்றும் நிற்கும். அத்துடன் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கும் என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு துல்லியமான HIMARS ராக்கெட் அமைப்புகளை வழங்கும் திட்டத்தை பைடன் அறிவித்தார்.
கியேவில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் இலக்குகளைத் தாக்க அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைன் உத்தரவாதமளித்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், பென்டகனில் செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கையில்,
அமெரிக்கா முதலில் உக்ரைனுக்கு நான்கு HIMARS அமைப்புகளை அனுப்பும் என்றார்.
புதிய அமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்து உக்ரேனியப் படைகளுக்கு பயிற்சி அளிக்க சுமார் மூன்று வாரங்கள் ஆகும் என்று அந்த அதிகாரி கூறினார்.



