அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர்

Kanimoli
3 years ago
அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர்

அதிபர் ஜோ பைடனை(Joe Biden) வெள்ளை மாளிகையில் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்(Jens Stoltenberg) இன்று சந்திக்கிறார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) உக்ரைனுக்கு அதி நவீன நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனை(Joe Biden) நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்(Jens Stoltenberg) வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கிறார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் (Kareen Jean-Pierre) கூறுகையில்,

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை(Jens Stoltenberg) இன்று வெள்ளை மாளிகையில் சந்திப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் உக்ரைன்- ரஷ்யா இடையே 100- வது நாட்களாக தொடர்ந்து நடக்கும் போர் குறித்து அவர்கள் ஆலசோனை செய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!