இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலியா தனது பிரஜைகளுக்கு விடுத்த எச்சரிக்கை!
Nila
3 years ago

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டியதன் அவசியத்தை மீள் பரிசீலினை செய்யுமாறு அவுஸ்திரேலியா தனது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் வர்த்தக திணைக்களம் ஆகியன இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பயணிகளுக்கு விளக்கமளித்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிர்வரும் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இருந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சினால் வீரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்று 20க்கு இருபது போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போன்ற தொடர்களில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



