விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

Prabha Praneetha
3 years ago
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இணையவழியூடாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதுடன், மூன்று முக்கிய விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமரை நியமிக்குமாறும், அமைச்சரவையை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!