கோட்டாவின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா!

Prabha Praneetha
3 years ago
கோட்டாவின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா!

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, “பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்க நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கிறேன்.

காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன்.

ஆரம்பத்தில் இருந்தே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் துணிச்சலான போராளிக் குடிமக்களின் குழந்தைகளுக்கு நான் முழு மனதுடன் ஆசீர்வதித்தேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!