பிரதமராகிறார் ரணில்?
#Ranil wickremesinghe
Prathees
3 years ago

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இன்று அல்லது நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணிலுக்கும் இடையே நேற்று இரவு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்த நிலையில் இன்று (12) காலையும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பகுதியினர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஏற்கெனவே தமது சம்மதத்தை தெரிவித்துள்ளன என்று என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



