இலங்கையில் ஊரடங்கு காலத்திலும் 32 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டங்கள்!

Nila
3 years ago
இலங்கையில் ஊரடங்கு காலத்திலும்  32 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டங்கள்!

‘கோட்டா கோ கம’ பகுதியில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று 32 ஆவது நாளாகவும் காலிமுகத்திடல் பகுதியில் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று முதல் தொடர்ச்சியாக அதிகளவான மக்கள் குறித்த பகுதிகளில் குழுமியிருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், அலரி மாளிகையை அண்மித்த பகுதியிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அலரி மாளிகையை சூழ இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் அலரிமாளிரக்கருகில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க இராணுவம் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!