ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அழைப்பு - அடுத்த பிரதமர் யார்?
#SriLanka
#Sri Lanka President
#Gotabaya Rajapaksa
#Lanka4
Shana
3 years ago

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். கட்சி சார்பற்ற பிரதமர் நியமனம், 15 பேர் கொண்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவை, சிவில் மக்களை கொண்ட ஆலோசனைக் குழுவை நிறுவுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணைகள் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, துரிதமாக தீர்க்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



