காலி முகத்திடத்தில் இராணுவம் களமிறக்கப்பட்டது ஏன்?
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும் பொலிஸாருக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் அரச ஆதரவாளர்களுக்கும், அரச எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் மோதலை கட்டுப்படுத்த பொலிஸ், அதிரடிப்படைக்கு மேலாக இராணுவம் வரவழைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



