அவசரநிலை காரணமாக பாதுகாப்பு படை வீரர்களின் விடுமுறை ரத்து

அனைத்து பாதுகாப்பு படை வீரர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடுமுறையில் இருக்கும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களை பணிக்கு வருமாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் காரணமாக பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொது அவசர நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



