சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்!

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள யோசனை என்பன தொடர்பில் இன்று இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதற்கிடையில் சுயாதீன நாடாளுமன்ற குழுவும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.
இதுதவிர சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர்.



