ரஷ்ய அதிபருடன் தொடர்புடைய 5400 கோடி பெறுமதியான சொகுசு கப்பலை பறித்த இத்தாலிய அரசு

#Ukraine
Prasu
3 years ago
ரஷ்ய அதிபருடன் தொடர்புடைய 5400 கோடி பெறுமதியான சொகுசு கப்பலை பறித்த இத்தாலிய அரசு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொடர்புடையதாக கூறப்படும் 5400 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கப்பலை இத்தாலி அரசு பறிமுதல் செய்துள்ளது.

6தளங்களும் ,2 ஹெலிக்கப்டர் இறங்கு தளங்களும் கொண்ட இந்த சொகுசு கப்பல் ரஷ்ய அதிபர் புட்டினுக்கு சொந்தமானத் என்பதற்கான சான்றுகளை அலெக்சி நவல்னியால் நிறுவப்பட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தக்கப்பலில் ஒரே நேரத்தில் விருந்தினர்கள் 18 பேரும்,மாலுமி பணியாளர்கள் 40 பேரும் தங்க முடியும் . ரஷ்ய எண்ணெய் நிறுவனமான  ரோஸ்னப்டின்  முன்னால் தலைவர் எட்வர்டு குடைநட்டோவ் பெயரில் உள்ள இந்தக் கப்பல்  இத்தாலியின் மரினா டி கராரி துறைமுகத்துக்குப் பழுதுபார்க்க  கொண்டு வரப்பட்டது.

மீண்டும் புறப்பட தயாரான நிலையில் ரஷ்ய அரசுக்கு தொயர்புடையது எனக்கூறி  இந்தக் கப்பலை பறிமுதல் செய்ய இத்தாலி நிதியமைச்சகம் உத்தரவிட்டது.அதையடுத்துக் காவல்துறையினர் கப்பலை பறிமுதல் செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!