இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியது.
இதுகுறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கையில்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய, குறிப்பிட்ட வேலைத்திட்டம் மற்றும் கால எல்லைக்குள் நாட்டை கட்டியெழுப்புவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு சமகி ஜனபலவேகய தீர்மானித்துள்ளது.
மேலும் தற்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலும் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குமான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாகவும் நாங்கள் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டார்.



