ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ரணில் விடுத்த வேண்டுகோள்: உடனடியாக கலைந்து சென்றனர்
#Ranil wickremesinghe
#Protest
Mayoorikka
3 years ago

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தன்னை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ரணில் மேலும் தெரிவிக்கையில்,
“எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்களன்று என்னை சந்திக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும் அங்கிருந்து கலைந்துசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.



