கோவில் மண்டபத்திற்குள் சடலம்- கொலையா- தீவிர விசாரணையில் காவல்துறை!
#SriLanka
#Kilinochchi
#Police
Mugunthan Mugunthan
3 years ago

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்திலேயே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 43 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது உயிரிழப்பு கொலையா தற்கொலையா என்பது தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



