நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் நாடகம்! கடுமையாக சாடிய மஹேல
Reha
3 years ago

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சம்பந்தப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் நாடகம் குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் பதவியை இராஜினாமா செய்ய உள்ளார்.
“இது நகைச்சுவையா? தற்போதைய நெருக்கடியில் அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இந்த நியமனம் என்பது போல் நேரத்தையும் பணத்தையும் வீணடித்தது, மேலும் அவர் மீண்டும் ராஜினாமா செய்கிறார் " என்று மஹேல ட்வீட் செய்துள்ளார்.



